கன்னடத்திலும் கலக்க போகும் தயாரிப்பாளர் சி.வி. குமார்


கன்னடத்திலும் கலக்க போகும் தயாரிப்பாளர் சி.வி. குமார்

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த தயாரிப்பு நிறுவனம் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’. இதன் உரிமையாளர் சி.வி.குமார் ஆவார். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’ ‘முண்டாசுப்பட்டி’ போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து ஒரு கவனித்தக்க முன்னணி தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.

இவர் தற்போது, சித்தார்த் நடித்து வரும் ‘எனக்குள் ஒருவன்’ படத்தை தயாரித்து வருகிறார். தமிழில் தரமான படங்களை கொடுத்த இவர் இன்று கன்னட திரையுலகையும் கலக்க போகிறார்.

இந்நிலையில், தங்களது முதல் கன்னட தயாரிப்பாக திகந்த் மன்சாலே ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் உருவாக இருக்கிறது இப்படம். இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது.