நயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாக சிவகார்த்திகேயன்..!


நயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாக சிவகார்த்திகேயன்..!

தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டி போட்டு வைத்திருப்பவர் நயன்தாரா.

எந்தவொரு நடிகையும் பெறாத சம்பளத்தை பெற்று நம்பர் 1 நடிகையாக சில ஆண்டுகளாகவே முன்னணியில் இருக்கிறார்.

தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார் நயன்.

இவரது நெருங்கிய நண்பர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தைத்தான் தயாரிக்கிறார்.

இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம்.

இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.