‘புலி’ விஜய்க்கு ஓப்பனிங் ஸாங்கே 5 கோடியா? அப்போ மீதி..?


‘புலி’ விஜய்க்கு ஓப்பனிங் ஸாங்கே 5 கோடியா? அப்போ மீதி..?

‘ஜில்லா’, ‘கத்தி’ வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா என கதாநாயகி பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். தற்போது நடிகை அஞ்சலியும் இப்படத்தில் இணையலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்துள்ளது.

மன்னர் காலம் மற்றும் இன்றைய நவீன தொழில்நுட்ப காலம் என இரண்டு காலகட்டங்களில் உருவாகி வருவதாக சொல்லப்படும் ‘புலி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு வேகமான நடைபெற்று வருகிறது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ். இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில்  படமாக்கப்பட்டது. விஜய்யும் அவருடன் 100 நடனக் கலைஞர்களும் இணைந்து ஆடும் ஓபனிங் ஸாங் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்காக சுமார் 5 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட செட் ஒன்றை உருவாக்கினாராம் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்.