விஜய்யின் ‘புலி’ நஷ்டத்தை ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர்கள்!


விஜய்யின் ‘புலி’ நஷ்டத்தை ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர்கள்!

சிம்புதேவன் இயக்கிய விஜய்யின் புலி கடந்த மாதம் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்தினம் விஜய், பிடி செல்வகுமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் விடிய விடிய வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஆனது.

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரவில்லை என்றாலும் ரஜினி வாழ்த்தினார், சிம்பு வாழ்தினார் என்ற விளம்பரங்கள் வெளியானது. மேலும் படம் அசுர வெற்றி, அசத்தல் வெற்றி, அபார புலி, அட்டாக் புலி என்ற செய்திகள் காட்டுத் தீயாக பரவியது.

தற்பொழுது புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் மற்றும் சிபு ஆகியோர் புலி படத்தின் விளம்பரங்கள் மூலம் மறைக்கப்பட்ட சில ரகசியங்களை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நடிகருக்கு தனி சம்பளம். மேலும் அப்படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்தால் அதற்கான சம்பளத்தை தனியாக கொடுக்க வேண்டும் என்பதே சினிமாவின் நியதி. எனவே ஸ்ரீதேவியும் அதன் அடிப்படையில்தான் புகார் ஒன்றை சமீபத்தில் கூறியிருந்தார். இதுகுறித்து புலி தயாரிப்பாளர்கள் கூறியதாவது…

தெலுங்கில் டப்பிங் பேச ரூ. 15 லட்சமும், ஹிந்தியில் டப்பிங் பேச ஹிந்தி சேட்டிலைட் உரிமையில் ரூ. 55 லட்சமும் ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூரிடம் கொடுத்துவிட்டோம். ஹிந்தியில் ஸ்ரீதேவிக்கு மார்கெட் உள்ளது என்பதால் அங்கும் வெளியிட வேண்டும் என்றார்கள். இதற்காக ரூ. 1 கோடி வரை செலவு செய்தோம். ஆனால் அங்கிருந்து ஒரு ரூபாய் கூட எங்களுக்கு லாபம் வரவில்லை.

மேலும் படத்தை உரிய நேரத்தில் வெளியிடாமல் சிம்புதேவன் தாமதப்படுத்திவிட்டார். அதுபோல படத்திற்கு வரிச்சலுகையும் கிடைக்கவில்லை என்பதால் நஷ்டம் மிகவும் அதிகமானது.

இது இப்படியிருக்க எதற்காக பொய் விளம்பரம் செய்யப்பட்டது என்றதற்கு… “வருமானவரித் துறையினரின் சோதனையினால் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேலும் ஸ்ரீதேவி கேட்ட பணத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. எனவே எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஸ்ரீதேவி புகாரை திரும்பபெற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்” தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்.

அட ஒரு உண்மைய கேட்டால் பல உண்மைகள் வெளிவருதே…