இப்படி பண்றாரே சிவகார்த்திகேயன்; தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!


இப்படி பண்றாரே சிவகார்த்திகேயன்; தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படத்தை தயாரித்து வருவது தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டாக மாறிவிட்டது. சூர்யா, ஆர்யா, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி ஆகியோரை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் அடுத்து இணைய காத்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

கடந்த மாதம் தனுஷ் தயாரிப்பில் இவர் நடித்த ‘காக்கி சட்டை’ படம் வெளியானது. படமும் வசூலை வாரி குவித்ததாக தகவல்கள் வந்தது. அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தையடுத்து யார் படத்தில் நடிக்க போகிறார்? என்பது கோடம்பாக்கத்தின் மிகப்பெரிய கேள்வியாய் இருந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது எடுத்துள்ள முடிவு அவரை நம்பி இருக்கும் தயாரிப்பாளர்களை கதிகலங்க வைத்துள்ளதாம். இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் இவர்.

இனி தான் நடிக்கும் படங்களை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லைன் புரொடியூஸராக தயாரிக்கப் போகிறாராம். தான் எடுத்த படத்தை எந்த தயாரிப்பாளர் அதிக தொகைக்கு கேட்க முன்வருகிறாரோ அவருக்கு விற்றுவிடுவாராம் சிவகார்த்தி.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள தெரிந்தவர்தான் இந்த எதிர்நீச்சல் நாயகன்.