எங்களை காப்பாற்றுங்கள்.. புலி தயாரிப்பாளர் உண்ணாவிரதம்..!


எங்களை காப்பாற்றுங்கள்.. புலி தயாரிப்பாளர் உண்ணாவிரதம்..!

தன் பிஆர்ஓ (மக்கள் தொடர்பாளர்) பிடி செல்வகுமாரை புலி படத்தின் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தார் நடிகர் விஜய்.

மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம், படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்த போக்கிரி ராஜா படத்தை எடுத்தார்.

இப்படமும் கொட்டாவி விட்டது. இந்நிலையில் திடீரென்று இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் பி.டி. செல்வகுமார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அதிருப்தியாளர்கள் 10 பேர், பிடி.செல்வகுமார் தலைமையில் வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோவில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அதிருப்தி தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் இதோ…

 • டந்த 5 ஆண்டுகளாக அரசு விருதுகள் வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கை தேவை.
 • மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சலுகைகள் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும்.
 • சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்.
 • பட்ஜெட்டை கண்ட்ரோல் செய்ய குழுக்கள் நியமிக்க வேண்டும்.
 • தயாரிப்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.
 • பத்து வருடங்களாக சிறு பட்ஜெட் படங்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை, அதை பெற்றுத்தர வேண்டும்.
 • முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றும் போது கிடைக்கும் சம்பளத்தை சிறு பட்ஜெட் படங்களுக்கும் சில கலைஞர்கள் நிர்ணயம் செய்கின்றனர். இதை மாற்றி இரண்டு விதமாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • 24 கிராப்டுகள் மூலம் தயாரிப்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்.
 • சேட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை மூலம் கிடைத்த வருமானம் இப்போது தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பதில்லை.
 • திருட்டு விசிடியை முற்றிலும் தடுக்க நடவடிக்கை தேவை.
 • ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதை தடுத்து, முறைப்படுத்த வேண்டும்.