‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…


‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இது நம்ம ஆளு படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக இப்படம் சோதனைகளை சந்தித்தது. பல போராட்டங்களை சந்தித்த இப்படம் இன்று உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய தனுஷ் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளர்.

இதனையறிந்த தனுஷ், சிம்புவின் படத்தை வாழ்த்தியமைக்கு “என் ரசிகர்களால் நான் பெருமிதம் அடைகிறேன். அன்பை பறிமாறுங்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.