எந்த ‘புலி’ வந்தாலும் விஷாலின் பாய்ச்சல் நிற்காதாம்!


எந்த ‘புலி’ வந்தாலும் விஷாலின் பாய்ச்சல் நிற்காதாம்!

கடந்த பொங்கல் அன்று ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் வெளியானது. மற்ற படங்கள் பயந்து பின் வாங்கிய நிலையில் இதே நாளில் விஷால் தயாரித்து நடித்த ‘ஆம்பள’ படமும் வெளியானது. படம் தயாராகும்போதே வெளியீட்டு தேதியை அறிவித்தவர் சொன்னபடி செய்தும் காட்டினார்.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து தயாராகிவரும் பாயும் புலி படத்திற்கும் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடிக்க, இவருடன் காஜல் அகர்வால், சூரி, சமுத்திரக்கனி, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்திருப்பதாவது… “ஒரு காவல் துறை அதிகாரியின் வாழ்க்கை படத்தில் நான் நடித்ததில் பெருமையடைகிறேன். இந்த படம் வெற்றி, தோல்வி பற்றி எனக்கு கவலையில்லை’ என டுவிட் செய்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி அன்று ‘பாயும் புலி’ படம் வெளியாகும் என்று விஷால் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம். இதே நாளில்தான் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப்  உள்ளிட்டோர் நடித்துள்ள ‘புலி’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.