விஜய்யின் ‘புலி’யால் ‘போக்கிரி ராஜா’வுக்கு வந்த பிரச்சினை…!


விஜய்யின் ‘புலி’யால் ‘போக்கிரி ராஜா’வுக்கு வந்த பிரச்சினை…!

விஜய்யின் கேரியரிலே இல்லாத அளவிற்கு புலி படம் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இப்படத்தை விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியது. ஆனால் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை விட படம் படு தோல்வியை சந்தித்தது.

இதனால் ‘புலி’ படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி தூக்கியிருந்தனர். ஆனால் நஷ்ட ஈடு தராமலே செல்வகுமார் காலம் கடத்தி வந்தார்.

எனவே செல்வகுமார் தயாரிப்பில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘போக்கிரி ராஜா’ படத்திற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் ரெட் கார்ட் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ‘போக்கிரி ராஜா’ ரிலீஸாவதில் பிரச்சினை எழுந்துள்ளது. இப்படத்தில் ஜீவாவுடன், ஹன்சிகா, சிபிராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.