ஐந்து மொழிகளில் ட்ரெண்டாகும் விஜய்யின் ‘புலி’


ஐந்து மொழிகளில் ட்ரெண்டாகும் விஜய்யின் ‘புலி’

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் ‘புலி’. இப்படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் இந்தி திரையுலகில் இன்றும் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் ஸ்ரீதேவி மற்றும் கன்னடவுலகின் சூப்பர் ஆக்டர் சுதீப் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். எனவே ‘புலி’ படத்தை மற்ற மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர்.

விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதால் முதன்முறையாக மலையாளத்தில் இப்படத்தை வெளியிடவுள்ளனர். மேலும் ‘ஜில்லா’ படத்திற்கு ஆந்திராவில் ஏற்பட்ட வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிம் டப் செய்து வெளியிடவுள்ளனர். ஸ்ரீதேவி என்ற நட்சத்திர அந்தஸ்து இருப்பதால் இந்தியிலும் நிறைய திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள் புலியை வரவேற்கும் வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் ஹேஷ்டேக் கிரியேட் செய்துள்ளனர். தற்போது #PULI, #புலி, # पुली, #പുലി, # పులిಪುಲಿ என ஐந்து மொழிகளில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இப்படம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளான அக்டேபார் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.