மனிதநேயமிக்க மனிதர் விஜய்; ‘புலி’ டீம் புகழாரம்!


மனிதநேயமிக்க மனிதர் விஜய்; ‘புலி’ டீம் புகழாரம்!

சிம்புதேவன் இயக்கத்தில் ’புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இவருடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, சுதீப், பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து உள்ளனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் கூட இதுவரை வெளியாகாத நிலையில் இப்படத்தை விநியோகிக்கும் உரிமையை பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளாராம் ஒரு பிரமுகர். பிரபல டிவி நிறுவனம் ஒன்று பெரிய தொகைக்கு இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விஜய்யுடன் பணியாற்றியவர்கள் தங்களது அனுபவம் குறித்தும் விஜய்யின் குணாதிசயங்கள் குறித்தும் ஒரு வீடியோ காட்சியாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். யூடியூப் தளத்தில் இந்த வீடியோ பதிவு வெளியாகி உள்ளது.