விமர்சனம் செய்ய தகுதி; சுஹாசினிக்கு எதிராக சுவாஹா!


விமர்சனம் செய்ய தகுதி; சுஹாசினிக்கு எதிராக சுவாஹா!

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி இணையதள விமர்சகர்கள் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.

சுஹாசினி கூறியதாவது… “கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்து சமூக வலைதள சினிமா ஆர்வலர்களை கொதிப்படையச்  செய்துள்ளது.

சுஹாசினியின் கருத்துக்கு எதிராக எழுந்துள்ள கருத்துக்கள் இதோ உங்களுக்காக…

புகழ் @mekalapugazh - அஞ்சானுக்கு லிங்குசாமி மாதிரி… ஓகே கண்மணிக்கு சுகாசினி போல..

Alex Pandian @AxPn - கத்துகிட்ட மொத்த வித்தையையும் சுஹாசினி கரெக்டா ஒருவாரம் முன்னர் இறக்கிட்டாங்க போல #ஓகேகண்மணி – பாவம் மணி/ப்ரொட்யூசர்

அறிதுயிலன் ‏@iKaruppuu - விமர்சனம் பண்ணக்கூடாதா! ஜெயா டிவில கால்மேல கால்போட்டு உட்கார்ந்த நிகழ்ச்சிய நான்கூட விமர்சன நிகழ்ச்சின்னு நம்பிட்டேனேப்பா! #சுஹாசினி

சி.சரவணகார்த்திகேயன் ‏@writercsk - விமர்சனம் போல் சினிமா பார்க்கவும் எல்லோருக்கும் தகுதி இல்லை என சுஹாசினி அறிவிக்கலாமே!

Dr பட்டர் கட்டர் ‏@Butter_cutter - மவுஸ் யூஸ் பண்ணத்தெரிஞ்சவன் எல்லாம் விமர்சனம் பண்ணக்கூடாது – சுஹாசினி #கீ போர்டு பழகிறதுக்கு டியூசன் எடுப்பாங்க போல!

கானா பிரபா ‏@kanapraba - இன்னிக்கு ஒரு படம் பார்க்கலாம்னு இருக்கேன் சுஹாசினி மேடம் கிட்ட அனுமதி வாங்கிடணும் முதல்ல.

சுபாஷ் ‏@su_boss2 - பத்திரிகைகாரர்களை நம்பிதான் நாங்க இருக்கோம். மத்தவங்களை எழுத விடாதீங்க-சுஹாசினி#அப்படினா படத்தை CDபோட்டு பத்திரிகைகாரங்ககிட்டயே வித்துடுங்க.

Parthiban Shanmugam ‏@hollywoodcurry - ஆனா அவங்கெல்லாம் உறைக் ✉ கொடுத்ததான் விறைப்பா விமர்சனம் எழுதுவாங்க…

ஜப்பான் ரகு @japan_raghu - சுஹாசினி ” #Qualified ” டிரிங்கர்ஸ் மட்டும்தான் டாஸ்மாக் போகனும்னு சொல்லல.

சௌம்யா ‏@arattaigirl - விமர்சனம் என்பதில் பாராட்டும் அடங்கும் தானே!?

புத்திகாலி ‏@Tottodaing - என்னது, படத்த விமர்சனம் பண்ணக்கூடாதா….. படம் பிடிக்கலேன்னா எழுந்து போயிடுங்கன்னு சொன்ன பினிஷிங் குமாரே பரவால்ல போல!

நிலா ரசிகன்! ‏@RaittuVidu - சுஹாசினி! நல்லபடம் எடுக்க தெரிஞ்சவன் தான் படம் எடுக்கணும்னு நாங்க மணிய சொல்லலாமா?

Tamil VJ Profiles ‏@tamilvjfans11 - Mrs.மணிரத்னம் அவர்களுக்கு, விமர்சனம் எழுத தகுதியுள்ளவர்கள் மட்டுமே ஓ.கே கண்மனி திரைப்படத்தை பார்க்க அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

Saa Naa ‏@sanasumu - படத்தை விமர்சனம் செய்யக்கூடாதுன்னா நீங்க உங்க ஹோம் தியேட்டரில் ரிலீஸ் பண்ணி உங்க ஹோம் ஆளுங்களை மட்டும் பார்க்க சொல்லுங்க சுகாசினி மேடம்.