‘விஷாலின் வில்லன் நானே…ஆர்.கே.சுரேஷ்


‘விஷாலின் வில்லன் நானே…ஆர்.கே.சுரேஷ்

ஒரு பக்கம் நடிகர் சங்கத் தேர்தல் பணிகள், மறுபக்கம் தயாரிப்பாளர் அவதாரம், இன்னொரு பக்கம் பிஸியான நடிகர் மற்றும் ரசிகர் மன்ற நற்பணிகள்… என மனிதர் படுபிஸியாக இருந்தாலும் ‘பாயும் புலி’ படத்தை முடித்துவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகளி’ ஆடிக் கொண்ருக்கிறார். அதாவது கேத்ரீன் தெரசாவுடன் அப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க விஷால் தனது சொந்த நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ‘கொம்பன்’ முத்தையாவின் இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தப்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, இதில் நடிக்கவிருக்கிற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் வில்லனாக நடிக்க ஆர்.கே.சுரேஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்ககவலை இவரே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இவர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ‘சூது கவ்வும்’, ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களின் விநியோகிஸ்தர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.