‘ரஜினி-கமல் இணைய வேண்டும்…’ மாதவனின் மகா ஆசை..!


‘ரஜினி-கமல் இணைய வேண்டும்…’ மாதவனின் மகா ஆசை..!

சுதா இயக்கியுள்ள ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார் மாதவன். கடந்த மூன்று வருடங்களாக இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அமெரிக்கா சென்று அங்கும் பயிற்சி பெற்று திரும்பினார் மாதவன்.

இதில் குத்துச்சண்டை வீராங்கனையாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாதவன் கூறியதாவது… “தமிழ் சினிமா தற்போது தனித்தன்மையுடன் இருக்கிறது. இங்குள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் திறமை சர்வதேச தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும்” என்றார்.

மேலும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என்னிடம் அதற்கான தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

கமல் சார், ரஜினி சார் இருவரும் மிகப்பெரிய கலைஞர்கள். அவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அப்படி இணைந்தால் அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து மெகா சாதனை படைக்கும்” என்றார்.