அஜித் வழியில் வருகிறார் சூர்யா… ராதாரவி சொன்ன தகவல்..!


அஜித் வழியில் வருகிறார் சூர்யா… ராதாரவி சொன்ன தகவல்..!

ஹீரோ, வில்லன், குணசித்திரம் என எந்த வகையான கேரக்டர் என்றாலும் அதில் தன் கேரக்டரை பேச வைப்பவர் நடிகர் ராதாரவி.

இவரின் கேரக்டர்களைப் போலவே, இவரது மேடை பேச்சுகளும் படு பிரபலம். இவரின் பேச்சை கேட்கவே ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

இவரது சமீபத்திய பேட்டியில்.. “நான் அஜித்தை சார் என்றுதான் அழைப்பேன். அவரின் மனிதாபிமனம் மற்றும் உதவி மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. யார் உதவி கேட்டாலும் உடனே பணத்தை அள்ளிக் கொடுப்பார்.

இவரைப்போலவே நடிகர் சூர்யாவும் செய்து வருகிறார். எஸ்3 (S3) படப்பிடிப்பின் போது சூர்யாவிடம் ஒருவர் கல்விக்காக உதவி கேட்டார். உடனே சூர்யா அவருக்காக ரூ 1 லட்சம் பணத்தை கொடுத்தார்’ என தெரிவித்துள்ளார்.