அர்ச்சனாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ராதாரவி!


அர்ச்சனாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ராதாரவி!

ராமராஜன், கவுண்டணி, செந்தில் நடித்த ‘வில்லுப்பாட்டுகாரன்’ படத்தில் நடிகராக அறிமுகமானவர்  ஆர்.கே. பெரிய தொழிலதிபரான இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, ‘அவன் இவன்’, ‘புலிவேஷம்’, ‘ஜில்லா’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் இவர் நடித்த ‘என் வழி தனி வழி’ படம் கடந்த மாதம் வெளியானது. இப்பட விழா ஒன்று  சமீபத்தில் நடைபெற்றது. விழாவினை டிவி தொகுப்பாளினியும் சின்னத்திரை நடிகையுமான காமெடி டைம் புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்கினார். விழாவில் பேச ஒவ்வொருவரையும் அழைத்தார். நடிகர் ராதாரவியை பேச அழைக்கும்போது நடிகர் ராதாரவி பேசுவார் என்று கூறிவிட்டார். இதனால் கடும் டென்ஷனில் காணப்பட்டார் ராதாரவி. விடுவாரா ராதாரவி. தொகுப்பாளினியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். அவர் கூறியதாவது…

“ஒருத்தரை பேச அழைக்கும்போது இப்படி மொட்டையாதான் கூப்பிடுவீங்களா? எனக்கு பொறுப்பான பதவி இல்லையா? தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர்னு சொல்ல தெரியாத நீங்க எல்லாம் ஏன் நிகழ்ச்சியை தொகுக்க வர்றீங்க. நான் உங்களைப் பற்றி இந்த மேடையில பேசினா உங்களால தாங்க முடியுமா? என்று சகட்டு மேனிக்கு போட்டுத் தாக்க, முகமெல்லாம் சுருங்கி போய்விட்டது அர்ச்சனாவுக்கு. பின்னர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அடுத்தவர்களை அழைக்க ஆரம்பித்தார் அர்ச்சனா.