‘என் குடும்பமே தப்பாக பேசித்தான் பழக்கம்’ – ராதிகா சரத்குமார்!


‘என் குடும்பமே தப்பாக பேசித்தான் பழக்கம்’ – ராதிகா சரத்குமார்!

நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிமிடம் முதல் சரத்குமார் மற்றும் விஷால் அணியிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பல்வேறு மூத்த நடிகர்களை சந்தித்து இரு அணிகளும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் தேர்தலையொட்டி நடந்த சரத்குமார் அணி ஆலோசனை கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேசினார். அவர் பேசியதாவது

எனது கணவர் சரத்குமார் நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்து விட்டதாக எதிர் அணியில் உள்ள நாசர் மற்றும் விஷால் கூறி வருகிறார்கள். அவர்கள் அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். விஷாலுக்கு சரியாக தமிழ் பேசத் தெரியுமா னத் தெரியவில்லை. ஆனால் நாசருக்குத் தெரியும். நான் அவர் அப்படி சொல்லவில்லை என்கிறார். நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். நிரூபித்தால் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நான் எத்தனையோ ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். எனக்கு ஒவ்வொருவரையும் பற்றி நன்றாகத் தெரியும். மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் என் கணவர் தானாகவே சென்று உதவி வருபவர். ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? என்பேன். விடு. பரவாயில்லை என்பார். உங்கள் உதவிக்கு யாராவது நன்றி சொன்னார்களா? என்று கேட்பேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை என்பார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதா பெரிதா? அல்லது நல்ல மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்கு உதவுவது பெரிதா? என் அண்ணன் ராதாரவி தவறாக பேசி விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். எங்கள் குடும்பமே அப்படித்தான் பேசும். எங்க அப்பா எம்.ஆர்.ராதா யாரையாவது திட்டினால் பாட்டாகவே பாடுவார். எங்களை அவர் வளர்த்தவிதம் அப்படித்தான். அதையும் தாண்டி ராதாரவியின் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்இவ்வாறு ராதிகா பேசினார்.