விஷால் ரெட்டியை திட்டிய ராதிகா, இன்று வாழ்த்து மழை!


விஷால் ரெட்டியை திட்டிய ராதிகா, இன்று வாழ்த்து மழை!

நடிகர் சங்கத் தேர்தலுக்காக நடைபெற்ற மோதலில் சரத்குமார், விஷால், சிம்பு, கருணாஸ், ராதாரவி ஆகியோரின் பேச்சு பலராலும் கவனிக்கப்பட்டது. இதில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளின் பேச்சு உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அதில் மிகவும் முக்கியமானவர் சரத்குமார் அணியை சேர்ந்த ராதிகா.

இதனிடையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராதிகா விஷால் மற்றும் கார்த்தியை பற்றி பேசியிருந்தார். அவர் பேசிய விஷால் ‘ரெட்டி’ என்ற வார்த்தை மீடியாக்களில் பூதாகரமானது. ஆனால் அதற்கு மற்றொரு சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார் ராதிகா.

இந்நிலையில் சரத்குமார் அணி தேர்தலில் தோல்வியை தழுவியது. இதில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து ராதிகாவும் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது… “வெற்றிப் பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்கள். தங்களின் புதுப்பயணத்தில் புதுமை படைக்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.