லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படப்பூஜை!


லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படப்பூஜை!

இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் படம் ‘காஞ்சனா-2’. லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த இப்படத்தில் டாப்ஸி, நித்யாமேனன், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, பூஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் லாரன்ஸ் இருவேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு கேரக்டரின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற பன்ச் டயலாக் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அதே பன்ச் டயலாக் தற்போது லாரன்ஸ் இயக்கும் படத்தின் தலைப்பாக மாறியுள்ளது. இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது பேய்ப்படம் இல்லை என்று கூறப்பட்டாலும் படத்தில் திகில் காட்சிகள் இருக்குமாம். அதுபோல அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்கிறார் இயக்குனர்.

இப்படத்தில் ராய் லட்சுமி ஹீரோயினாக நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் வேந்தர் மூவிஸ் மதன், லாரன்ஸ் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர். இது முனி படத்தின் நான்காம் பாகமாக அல்லது வேறு கதையா என்பது இதுவரை சஸ்பென்ஸாக உள்ளது. மொத்தத்தில் இது அனைத்து தரப்பினரையும் கவரும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்கிறது படக்குழு.

இப்படத்தை முதல் பிரதியின் அடிப்படையில், வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு தயாரித்து வழங்கவிருக்கிறார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.