ரஜினி இடத்தில் லாரன்ஸ்… பி. வாசுவின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!


ரஜினி இடத்தில் லாரன்ஸ்… பி. வாசுவின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனர் பி.வாசு. பல முன்னணி நடிகர்களுக்கு வெள்ளி விழா படங்களை கொடுத்து வந்த இவர், ரஜினிக்கும் பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் ரஜினியின் குசேலன் படத்திற்கு பிறகு தமிழ் படங்களை எதுவும் இயக்கவில்லை.

இந்நிலையில் சிவராஜ்குமார், வேதிகா, சக்திவேல் வாசு ஆகியோர் நடித்த சிவலிங்கா படத்தை கன்னடத்தில் எடுத்தார்.

இந்நிலையில் தமிழில் விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படமும் பேய் கதைகளை மையப்படுத்தி உருவாகவுள்ளதால், இப்படத்திற்கு சந்திரமுகி 2 என பெயரிட உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனைகளை உருவாக்கிய படம் ரஜினியின் சந்திரமுகி. குறுகிய கால இடைவெளியில் அதுவும் அதே பெயரில் ஒரு படத்தை பி. வாசு உருவாக்க இருப்பதால், ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.