லாரன்ஸை இயக்கும் சிவகார்த்திகேயன் இயக்குனர்.!


லாரன்ஸை இயக்கும் சிவகார்த்திகேயன் இயக்குனர்.!

இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘பைரவா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறாராம் லாரன்ஸ். இப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ ஆகிய இரு வெற்றிப் படங்களை மட்டுமே பொன்ராம் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது லாரன்ஸ், பொன்ராம் இணையும் இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இவர்கள் இருவரும் முதலில் தனித்தனியே இந்நிறுவனத்திற்காக படங்களை ஒப்புக்கொண்டார்களாம்.

அப்போது சந்தித்த இவர்கள், ஐங்கரன் நிறுவனத்திற்காக இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.