சிம்பு, தனுஷ்தான் செய்வாங்களா? நாங்களும் செய்வோம்ல.. களம் இறங்கிய லாரன்ஸ்..!


சிம்பு, தனுஷ்தான் செய்வாங்களா? நாங்களும் செய்வோம்ல.. களம் இறங்கிய லாரன்ஸ்..!

காஞ்சனா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து லாரன்ஸ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா.

சாய்ரமணி இயக்கி வரும் இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்காக முதன்முறையாக தன் சொந்த குரலில் லாரன்ஸ் ஒரு பாடலை பாடியுள்ளார். இவருடன் பின்னணி பாடகி சுசித்ராவும் இணைந்து பாடியுள்ளார்.

இவர்களைப் போல் பின்னணி பாடகர்களும் இதே பாடலை பாடியுள்ளனர்.  எந்த குரலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறதோ, அந்த குரலில் ஒலிக்கும் பாடல் படத்தில் இடம் பெறவிருக்கிறதாம்.

தற்போது நடிகர்கள் தங்கள் படங்களில் பாடல்களை பாடி வருகின்றனர். இதில் தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் தங்கள் படங்களில் நிச்சயம் ஒரு பாடலையாவது பாடி விடுகின்றனர்.

இந்த பாடல் ஹிட்டானால் இந்த வழியில் இனி லாரன்ஸ்ம் தொடர்ந்து பயணிப்பார் என்றே தெரிகிறது.

வாழ்த்துக்கள் மொட்ட சிவா..ஜி