‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ – லாரன்ஸின் அடுத்த அதிரடி!


‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ – லாரன்ஸின் அடுத்த அதிரடி!

இந்த 2015ஆம் வருடத்தின் முதல் ப்ளாக்பஸ்டர் என்ற பெருமையை ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-2’ படம் பெற்றது. தமிழகம், கேரளா, ஆந்திரா என மாநில வாரியாக வசூலை அள்ளியது. இப்படத்தில் டாப்ஸி, நித்யாமேனன், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, பூஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் லாரன்ஸ் இருவேடங்களில் நடித்திருந்தார். அதிலும் அவர் ஏற்ற மொட்டை சிவா கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது. எனவே அக்கேரக்டர் பெயரில் ‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ என்ற ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார்.

இப்படம் குறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இதற்கு முன்பு நான் நடித்து இயக்கிய ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’ ஆகிய படங்கள் பேய் கதை படங்கள். ஆனால் நான் தற்போது இயக்கவிருக்கும் ‘மொட்ட சிவா, கெட்ட சிவா,’ பேய் படம் அல்ல.

இப்படத்தில் திகிலும் இருக்கும். அதுபோல அதிரடி சண்டை காட்சிகளும் இருக்கும். மொத்தத்தில் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும். மற்ற கலைஞர்கள் விவரங்களை விரைவில் தெரிவிப்பேன். இப்படத்தை முதல் பிரதியின் அடிப்படையில், வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு தயாரித்து வழங்கவிருக்கிறேன்” என்றார்.