வெள்ளாவி நடிகைகளை லாரன்ஸ் தேர்வு செய்யும் ரகசியம்..?


வெள்ளாவி நடிகைகளை லாரன்ஸ் தேர்வு செய்யும் ரகசியம்..?

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இவரது அழகான வெள்ளை உள்ளத்தால் பல சேவைகளை செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு ஏழை சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவினார்.

இவரது வெள்ளை உள்ளத்தைப் போலவே இவரது பட நாயகிகளையும் வெள்ளை வெளேரென தேர்வு செய்து வருகிறார்.

முனியில் வேதிகா, காஞ்சனாவில் ராய் லட்சுமி, காஞ்சனா 2வில் டாப்சி மற்றும் தற்போது நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நிக்கி கல்ராணி ஆகிய வெள்ளாவி நடிகைகளையே தேர்வு செய்திருந்தார்.

இதற்காக காரணம் என்னவென்று விசாரித்த போது… ‘லாரன்ஸ் கறுப்பு நிறம் உடையவர். அவரது படத்தை பார்க்க ரசிகர்களை இன்னும் சந்தோஷமடைய செய்ய, வெள்ளை நிற நாயகிகளை நடிக்க வைக்கிறார், இது ஒன்றும் தப்பில்லையே” என்கின்றனர்.

அட இதுலயும் ரசிகர்களின் சந்தோஷம்தான் முக்கியம் என நினைக்கிறாரே லாரன்ஸ். வாழ்த்துக்கள் சார்.