குழந்தைகளுக்கு பீஸ் கட்ட முடியல… லாரன்ஸ் எடுத்த அசத்தல் முடிவு..!


குழந்தைகளுக்கு பீஸ் கட்ட முடியல… லாரன்ஸ் எடுத்த அசத்தல் முடிவு..!

பன்முக திறமைகள் கொண்ட ராகவா லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளை செய்து ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

இவர் தனது டிரஸ்ட் மூலம் 60 குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைக்கிறார்.

தற்போது பூந்தமல்லி அருகே பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருகிறார். இங்கு பிரி கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கவிருக்கிறாராம்.

இதுகுறித்து அவர் தன் பேட்டியில் கூறியதாவது…

“என் டிரஸ்ட் மூலம் பல மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் படிக்க கட்டணம் கட்டுவது சிரமமாக இருக்கிறது.

எனவே ஒரு பள்ளியை நிறுவி அதன் மூலம் கல்வியை கொடுத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியதால் இந்த முடிவை எடுத்தேன்.

எனக்குதான் படிப்பு வரல. ஆனால் படிக்க நினைக்கும், மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாமே” என்று தெரிவித்தார்.