‘சவுகார்பேட்டை’ பேய் அடித்து மயங்கிய ராய் லட்சுமி !


‘சவுகார்பேட்டை’ பேய் அடித்து மயங்கிய ராய் லட்சுமி !

லட்சுமி ராய்… ஓ ஸாரி. இப்போ ராய்லட்சுமி. இவர் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற பேய் படங்களில் நடித்திருந்தார். பேய் படங்களில் நடித்திருந்தாலும் இவர் பேயை பார்த்து பயப்படும் கேரக்டரில் நடித்திருந்தார்.

வெற்றிப் பெற்ற இந்த இரு பேய் படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்ற ராசியால் இம்முறை  பேயகாவே நடித்து வருகிறார். ‘சவுகார்பேட்டை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்துடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதில் ஸ்ரீகாந்த் மந்திரவாதியாகவும், ராய் லட்சுமி பேயாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தாம்பரத்தை அடுத்துள்ள பகுதியில் உள்ள பங்களாவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் ஒரு காட்சி படமாக்கப்படும்போது அதாவது ராய் லட்சுமி பேயாக மாறுவதாக ஒரு காட்சி. இதில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதற்காக ராய் லட்சுமி அதிகபட்ச ஆக்ரோஷத்துடன் நடித்தாராம். அப்போது திடீரென மயங்கி விழுந்துவிட்டார். கிட்டதட்ட 1 மணி நேரத்துக்கு பின்னரே அவர் சுயநினைவுக்கு வந்தாராம். அதனால் அன்றைய தினம் வேறு காட்சிகளை படமாக்கினார்களாம்.

மேலும் இவர்களுடன் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க வி.சி. வடிவுடையான் இயக்குகிறார்.

படம் முடியறதுக்குள்ள ‘ராய்’ லட்சுமி ‘பேய்’ லட்சுமியாகிடுவாங்க போல…