‘நேற்று இயக்குனர்; இன்று தயாரிப்பாளர்; நாளை..?‘ அட்லியின் பயணம்!


‘நேற்று இயக்குனர்; இன்று தயாரிப்பாளர்; நாளை..?‘ அட்லியின் பயணம்!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார் அட்லி. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க விஜய்யின் அடுத்த படத்திற்கு இயக்குனர் ஆகிவிட்டார். இவர் இயக்குனர் ஷங்கருடன் ‘எந்திரன்’ மற்றும் ‘நண்பன்’ ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இதனிடையே சின்னத்திரை ஸ்டார் ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார் அட்லி. தற்போது இவரின் உதவி இயக்குனர் பாக்யராஜ் என்பவர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இந்நிலையில் இவரின் மற்றொரு உதவியாளர் ஐசக் என்பவர் இயக்கும் புதிய படத்திற்கு தயாரிப்பாளர் ஆக இருக்கிறாராம் அட்லி. ‘ராஜா ராணி’ படத்தை தயாரித்த ‘பாக்ஸ் ஸ்டார்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கக்கூடும் எனவும் தகவல்கள் வந்துள்ளன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.