தெறி ரன்னிங் டைமும்… ராஜா ராணி சென்டிமெண்ட்டும்…!


தெறி ரன்னிங் டைமும்… ராஜா ராணி சென்டிமெண்ட்டும்…!

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி, நைனிகா, மகேந்திரன், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தெறி’ ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் தெறி படத்திற்கு சென்சாரில் யு சர்ட்டிபிகேட் கிடைத்தது. இப்படத்தின் ரன்னிங் டைமும் அதில் தெரிய வந்துள்ளது.
தெறியின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 38 நிமிடம் வரைதான்.

இதற்குமுன் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தின் ரன்னிங் டைம் கூட 2 மணி நேரம் 38 நிமிடங்கள்தான் இருந்தன. இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

எனவே அதே சென்டிமெண்டில் தெறி படத்திற்கான ரன்னிங் டைமையும் அட்லி உருவாக்கியிருக்கலாம் என கிசுகிசுக்கப்ப்படுகிறது.