ரஜினியை இயக்கப்போகும் ராஜமௌலியின் தந்தை!


ரஜினியை இயக்கப்போகும் ராஜமௌலியின் தந்தை!

கடந்த ஜூலை மாதத்தில் வந்த இரு படங்கள் இந்திய சினிமாவையே கலக்கியுள்ளது. இரு படங்களும் வெவ்வேறு வகையாக இருந்தாலும் இரண்டிற்கும் பெரிய ஒற்றுமை உள்ளது. ‘பாகுபலி’ மற்றும் ‘பஜ்ரங்கி பைஜான்’ ஆகிய இருபடங்கள்தான் அவை. இந்த இருபடங்களும் இந்தியளவில் ரூ. 1000 கோடி வரை வசூலை குவித்துள்ளது.

இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டிற்கும் கதாயசிரியர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தான். இவர் தெலுங்கில் சில படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், விஜயேந்திர பிரசாத்தும் சந்தித்துப் பேசியுள்ளனர். அச்சமயம் அரசியல் பின்னணி கொண்ட ஒரு வித்தியாசமான கதையை ரஜினியிடம் கூறினாராம் விஜயேந்திர பிரசாத். கதையைக் கேட்ட ரஜினி, தனக்கு ஏற்றதாகவும் மிக அருமையாக உள்ளதாகவும் பாராட்டினாராம். மேலும் இதில் ரஜினி நடிப்பது உறுதியானால் அப்படத்தை விஜயேந்திர பிரசாத்தே இயக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.