சூர்யாவுடன் இணையும் ஜுனியர் என்டிஆர்… ராஜமவுலி திட்டம்..?


சூர்யாவுடன் இணையும் ஜுனியர் என்டிஆர்… ராஜமவுலி திட்டம்..?

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘24’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ராஜமவுலி இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாக உருவாக்கத்தில் பிஸியாக இருக்கிறார் ராஜமௌலி.

இதனையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தெலுங்கு சினிமா உலகின் பிரபல நடிகரான ஜுனியர் என்டிஆரும் நடிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பே ‘ஸ்டூடன்ட் நம்பர் 1′, ‘சிம்மாத்ரி, யமதொங்கா’ ஆகிய ராஜமௌலியின் மூன்று படங்களில் ஜுனியர் என்டிஆர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.