செம ஃபீலிங்கில்… பாங்கு குடித்து ராங்கு பண்ணிய ‘ராஜதந்திரம்’ ரெஜினா!


செம ஃபீலிங்கில்… பாங்கு குடித்து ராங்கு பண்ணிய ‘ராஜதந்திரம்’ ரெஜினா!

சமீபகாலமாக வடஇந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும் ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக மாறிவரும் ஹோலியை நடிகர், நடிகைகளும் வண்ண பொடிகளை வீசி விளையாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை மறக்க முடியாதபடி கொண்டாடி இருக்கிறார் நடிகை ரெஜினா. ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’, ‘பஞ்சாமிர்தம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர். வண்ணப் பொடிகளை தூவி மிக மகிழ்ச்சியாக  ஹோலியை கொண்டாடியுள்ளார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? வெயிட் ஜி… சொல்லுவோம்ல…

அதற்கு முன், ‘பாங்கு‘ என்ற போதை ஏற்றும் பானத்தை பருகி இருக்கிறார் அம்மணி. இலை மற்றும் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாங்கு பானத்தை வட இந்திய பெண்களும் ஹோலி சமயத்தில் குடிப்பார்களாம். எனவே, ரொம்ப நாட்களாகவே இந்த பானத்தை குடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட ரெஜினா, ஹோலி அன்று நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.

பாங்கு ருசிகண்ட பூனை… ஸாரி ருசி கண்ட ரெஜினாவிடம் இதுகுறித்து கேட்டபோது… “பாங்கு குடிக்க ரொம்ப நாளாக ஆசை. அதை குடித்தப் பிறகு ஒரு மாதிரியான ஃபீல் ஏற்படும் என்றனர்.  அந்த உணர்வை அறிய ஆவலாக இருந்தேன். ரியலி அந்த ஃபீல் செம ஃபீல்…” என்றார்.

விரைவில் வெளியாக இருக்கும் ‘ராஜதந்திரம்’ படத்தில் ரெஜினா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.