விஜய்யின் டிரைவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்!


விஜய்யின் டிரைவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்!

‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதுவரை பெயரிடப்படாத இப்படத்திற்கு ரஜினிகாந்த் நடித்த ‘மூன்றுமுகம்’ அல்லது விஜயகாந்த் நடித்த ‘வெற்றி’ ஆகிய படங்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், மீனா மகள் நைனிகா, நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன்  உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும் நடிக்கிறாராம். விஜய் இப்படத்தில் போலீஸ் வேடம் ஏற்கிறார். எனவே, விஜய்யின் டிரைவராக இவர் நடிக்கிறாராம். மேலும் ராஜேந்திரனின் காமெடிக்கு  தற்போது மார்க்கெட் உள்ளதால் கூடுதல் காட்சிகளை வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஜேந்திரன், விஜய்யுடன் நடிப்பது இதுவே முதன்முறை என்பது கவனித்தக்கது.