ரஜினி-கமல் 1 டஜன்; மோகன்லால்-மம்மூட்டி 1/2 செஞ்சுரி!


ரஜினி-கமல் 1 டஜன்; மோகன்லால்-மம்மூட்டி 1/2 செஞ்சுரி!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் –  சிவாஜிக்கு பிறகு ரஜினி – கமல் ராஜ்ஜியம்தான் இன்று வரை தொடர்கிறது. தமிழகத்தில் ரஜினி – கமல் போல கேரள மாநிலத்தில் மோகன்லால் – மம்மூட்டி இருவரும் மிகப்பெரிய நட்சத்திரங்கள். ஆனால் அவர்கள் இருவரும் செய்த சாதனையை நண்பர்கள் என்று சொன்னாலும் நம் ரஜினி – கமல் இதுவரை செய்யவில்லை.

எம்.ஜி.ஆர் – சிவாஜி ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்தனர். அதன் பின்னர் ரஜினியும் கமலும் இணைந்து 1 டஜன் படங்களில் நடித்தனர். 9 தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும், 1 இந்தி படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் மோகன்லால் –  மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்து அரை சதம் (1/2 செஞ்சரி) படங்களை தாண்டிவிட்டனர்.

இரண்டு பெரிய நட்சத்திரங்கள் எந்தவித ஈகோவும் இல்லாமல் நடித்து வருகிறார்கள். ‘படயோட்டம்’ என்ற ஒரு படத்தில் மோகன்லாலின் தந்தையாக மம்மூட்டி நடித்தார். இது திரையுலகில் ஒரு அதிசயமான நிகழ்வு என்று கூட சொல்லலாம். பெரும்பாலான படங்களில் மோகன்லால் வில்லனாக நடித்திருந்தார். 55 படங்களை கடந்து விட்ட இவர்கள் இருவரும் தற்போது 56வது படத்திற்காக இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் ‘கடல் கடந்நு ஒரு மாத்துக்குட்டி’ என்ற படத்தில் இருவரும் நடித்தனர். தற்போது இயக்குனர்கள் ஷாஜி கைலாஷ் – ரஞ்சித் – ரெஞ்சி பணிக்கர் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள ஒரு திரைக்கதையில் இருவரும் நடிக்கவுள்ளனர் என தெரிகிறது. அதுபோல இயக்குனர் பிரியதர்ஷனும் இவர்களுக்காக ஒரு கதையுடன் காத்திருக்கிறாராம்.

Related