ரஜினி, கமல் பாராட்டில் உள்நோக்கமா? சர்ச்சையை கிளப்பிய விசாரணை.!


ரஜினி, கமல் பாராட்டில் உள்நோக்கமா? சர்ச்சையை கிளப்பிய விசாரணை.!

தனுஷ் தயாரித்து வெற்றிமாறன் இயக்கிய ’விசாரணை’ கடந்த வெள்ளியன்று வெளியானது. இப்படத்தை பார்த்த கமல், இயக்குனரை அழைத்து பாராட்டினார்.

அதுபோல், மலேசியாவில் ’கபாலி’ படப்பிடிப்பில் இருக்கும் ரஜினியும் தன் பாராட்டுக்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதில் இதுவரை இப்படியொரு படத்தை பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரு ஜாம்பவான்களின் பாராட்டுக்களையும் தங்கள் படத்திற்கு விளம்பரமாக செய்து வருகின்றனர் விசாரணை படத்தை வெளியிடும் லைகா நிறுவனத்தினர். இங்கேதான் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

ரஜினியின் ’2.ஓ’ மற்றும் கமலின் இரண்டு புதிய படங்களை தயாரிக்கவிருக்கிறது லைகா நிறுவனம். எனவேதான் அதே நிறுவனத்தின் படத்திற்கு இருவரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் என்கின்றனர் சிலர்.

தரமான படங்கள் தமிழில் வெளியாகி உலகத்தரத்திற்கு எட்ட வேண்டும் என்று அடிக்கடி கூறி வருபவர் கமல்.

அதுபோல் எந்தவொரு படமாக இருந்தாலும், எந்த நடிகராக இருந்தாலும் அழைத்து மனதார பாராட்டி வருபவர் ரஜினி. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படத்தையும் அதர்வாவின் ‘கணிதன்’ படத்தையும் பாராட்டியிருந்தார். மேலும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமியின் சூறாவளி கேரக்டரை வெகுவாக பாராட்டியிருந்தார்.

இந்த படங்களுக்கும் லைகாவுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? இந்திய சினிமாவை நேசிக்கும் ரஜினி, கமல் இருவரும் தரமான படங்களை பாராட்டினாலும் குற்றம் சொல்லும் சிலரை நாம் என்னதான் சொல்வது…?