இணையத்தை கலக்கும் ரஜினி, விஜய் ரியல் லைப் டீஸர்!


இணையத்தை கலக்கும் ரஜினி, விஜய் ரியல் லைப் டீஸர்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் படங்கள் வருகிறதோ இல்லையோ… ஆனால் அவர்களை பற்றி தினம் ஒரு செய்தியாவது வந்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கும். சமீபத்தில் ‘புலி’ படத்தின் பாடல், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதுபோல ரஜினியின் ‘கபாலி’ பட அறிவிப்பு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு, டிவி தொகுப்பாளினி கீர்த்தி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி, விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எடிட்டிங் செய்து விஜய் ரியல் லைப் டீஸர் என வெளியிட்டு 2-4 நிமிடங்கள் ஓடும் சில காட்சிகளை பதிவேற்றியுள்ளனர். இதை வி1, வி2, வி3 என பகுதி பகுதிகளாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாந்தனு. மேலும் இன்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினியின் டீஸர் வெளியாகவுள்ளது. காத்திருங்கள். விரைவில் இது வேந்தர் டிவி ஒளிப்பரப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.