மீண்டும் ‘கபாலி’யை கையில் எடுக்கும் ரஜினிகாந்த்!


மீண்டும் ‘கபாலி’யை கையில் எடுக்கும் ரஜினிகாந்த்!

லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கும் ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஷங்கர் இயக்கிவரும் இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள ஸ்டூடியோவில் பிரத்யேகமாக அரங்கம் அமைக்கப்பட்டு ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான காட்சிகளை இந்த செட்டிற்குள் முடித்துவிட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு படக்குழு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையில் மீண்டும் கபாலி படப்பிடிப்பில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினி. இனி படமாக்கப்பட உள்ள காட்சிகள் ரஜினியின் இளவயது கேரக்டராம். எனவே, கபாலியில் மீதமுள்ள காட்சிகளை முடித்துவிட்டு மீண்டும் ‘2.ஓ’ படத்தில் நடிக்க திரும்புகிறார் ரஜினி.