‘வித்தியாசமான தேர்தல்; நோட்டுக்கு ஓட்டு…’ என்ன சொன்னார் ரஜினி.?


‘வித்தியாசமான தேர்தல்; நோட்டுக்கு ஓட்டு…’  என்ன சொன்னார் ரஜினி.?

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் தவிர 232 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குபதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, முதல் நட்சத்திரமாக வந்து சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தன் ஓட்டை பதிவு செய்தார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது…

“வாக்களிப்பது நம் கடமை. அனைவரும் கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இந்த முறை நடைபெறும் தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதுதான்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நோட்டுக்கு ஓட்டு போடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு… “நோ கமெண்ட்ஸ்” என்று தெரிவித்தார் ரஜினி.