‘ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும்’ – பிரபுதேவா பேட்டி


‘ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும்’ – பிரபுதேவா பேட்டி

சினிமாவில் பல்வேறு துறைகள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகின்றனர். இதில் பிரபுதேவா முக்கியமானவர். ஒரு நடன துணை இயக்குனராக தன் திரையுலக பயணத்தை தொடங்கி, நடன இயக்குனர், நாயகன், இயக்குனர் என ஒவ்வொரு துறையிலும் கால் பதித்து வெற்றியடைந்து வருகிறார்.

தற்போது பிரபுதேவா ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘சில நேரங்களில்’ மற்றும் ‘வினோதன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பிரபுதேவா கூறியதாவது

“மிகுந்த பொருட்செலவில் ராமாயணம் படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அப்படத்தை தயாரிப்பதற்கான தயாரிப்பாளர் தேவை. ஒருமுறை அமிதாப்பச்சனுடன் இணையும் வாய்ப்பு உருவானது. ஆனால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது. ஆனால் இப்போது அமிதாப் அழைத்தால் இயக்க தயாராக இருக்கிறேன். அதுபோல் ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். எனவே என்னோடு பணியாற்ற அவர்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.