ரஜினி பாராட்டிய ரித்விகா ‘கபாலி’யில் இணைந்தார்!


ரஜினி பாராட்டிய ரித்விகா ‘கபாலி’யில் இணைந்தார்!

இயக்குனர் பா.ரஞ்சித்  அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என்ற இரு படங்களை மட்டுமே இயக்கினார். தற்போது அவரே எதிர்பாராத வகையில் மூன்றாவது படமாக ரஜினியின் ‘கபாலி’ அமைந்தது. இந்நிலையில் தன்னுடன் இரு படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களை ‘கபாலி’யில் இணைத்து கொண்டார். இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு முரளி, எடிட்டிங்க்கு ப்ரவீன் ஆகியோர் கபாலியில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் நடிகர், நடிகைகளையும் ஒவ்வொருவராக சேர்த்து வருகிறார். ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் ஆகியோரை தொடர்ந்து ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த ரித்விகாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் கவுண்டமணி நடித்து வரும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘கபாலி’யில் நடிப்பதற்காக ரித்விகா படப்பிடிப்புக்கு வந்தபோது “மெட்ராஸ் படத்தில் அவரது நடிப்பு அருமையாக இருந்ததை ரஜினி குறிப்பிட்டு பாராட்டினாராம். “நீ நடித்த மேரி கேரக்டர் ரொம்ப பிடிச்சது” என்றாராம். சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற ரித்விகா படு குஷியாக இருக்கிறாராம்.