ரஜினி, அஜீத், கமல் வசூல் வல்லூறு யார்? அதிரடி ரிசல்ட்!


ரஜினி, அஜீத், கமல் வசூல் வல்லூறு யார்? அதிரடி ரிசல்ட்!

தமிழ் சினிமாவில் பாஸ் யார்? என்றால் அனைவரும் சொல்லும் பதில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். இவரின் படங்கள் என்றுமே பாக்ஸ் ஆபிஸில் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்து வருகின்றன. ரஜினியின் ஒரு படம் படைக்கும் சாதனையை அவரின் மறுபடம் முறியடிக்கும். இதுவே தொடர்கதையாகி வருகிறது.

ஆனால் அண்மையில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ முதல் நாள் வசூலில் ‘தூங்காவனம்’, ‘லிங்கா’, ‘கத்தி’, ‘ஐ’ படங்களின் சாதனையை முறியடித்தது. முதல்நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 15 கோடிக்குமேல் வசூலித்தது. எனவே இச்சாதனை பட்டியல் தொடரும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

தற்போது படம் வெளியாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. எனவே படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு என்ற தகவல்கள் வந்துள்ளன. அஜித்தின் ‘வேதாளம்’ முதல் வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளது. மழை வேறு வசூலைக் காலி செய்துவிட்டது.

ஆனால் ரஜினியின் ‘எந்திரன்’ தமிழகத்தில் மட்டும் முதல் வார முடிவில் ரூ 60 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதன் மூலம் என்றும் தான்தான் பாக்ஸ் ஆபீஸ் பாஸ் என்று நிரூபித்துள்ளார் சூப்பர்ஸ்டார்.