கபாலி டீசர்: ரஜினி நினைச்சா செஞ்சிருக்கலாம். ஆனால் செய்யலையே…!


கபாலி டீசர்: ரஜினி நினைச்சா செஞ்சிருக்கலாம். ஆனால் செய்யலையே…!

ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் படங்களை சமூக வலைத்தளங்களில் புரமோட் செய்து வருகின்றனர்.

ஆனால் 3 மில்லியன் ஃபாலோயர்களை ட்விட்டரில் வைத்திருக்கும் ரஜினி நினைத்திருந்தால், கபாலி டீசரை புரமோட் செய்திருக்கலாம்.

ஆனால் அப்படி அவர் எதுவும் செய்யவில்லை.

எந்தவொரு தமிழ்ப் படமும் இல்லையில்லை எந்தவொரு இந்தியப் படமும் செய்யாத சாதனையை ரஜினியின் கபாலி டீசர் செய்துள்ளது.

டீசர் வெளியாகி எட்டு நாட்களை கடந்துள்ள நிலையில் 15 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

மேலும், ஹாலிவுட் படங்களின் சாதனைகளையும் இது முறியடித்து வருகிறது.

எனவே, டீசரின் இமாலய வெற்றியை, சென்னை, நெல்லை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள் இனிப்பு வழங்கி, கொண்டாடி வருகின்றனர்.