பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘சிவலிங்கா’?


பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘சிவலிங்கா’?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘உழைப்பாளி’, ‘சந்திரமுகி’ மற்றும் ‘குசேலன்’ ஆகிய படங்களை இயக்கியவர் பி. வாசு. இதில் ‘உழைப்பாளி’ தவிர மற்ற அனைத்து படங்களுமே ரீமேக் செய்யப்பட்ட படங்களாகும்.

‘சந்திரமுகி’க்கு பிறகு தெலுங்கு, கன்னட மொழிகளில் படங்களை இயக்கி பி.வாசு ஹிட் கொடுத்திருந்தாலும் தமிழில் அஜித் நடித்த பரமசிவன் உள்ளிட்ட படம் வரை எதுவும் வெற்றிப் பெறவில்லை. எனவே மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்க இருக்கிறாராம் பி. வாசு.

தற்போது ‘சந்திரமுகி’ பாணியிலான ‘சிவலிங்கா’ என்ற பேண்டஸி த்ரில்லர் படத்தை கன்னடத்தில் இயக்கி வருகிறார். இதில் சிவராஜ்குமார், வேதிகா பி.வாசுவின் மகன் சத்திவேல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சிவலிங்கா படத்தின் கதையை ரஜினியை வைத்தே உருவாக்கினாராம். ஆனால் ரஜினி தற்போது ‘கபாலி’, ‘2.ஓ’ ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால் முதலில் கன்னடத்தில் இயக்கி வருகிறார்.

இதனிடையில் ரஜினியை சந்தித்து இதன் கதையை சொல்லியிருக்கிறாராம் பி.வாசு. “வெற்றியோடு வாங்க… படம் பண்ணுவோம்” என்று ரஜினி கூறியுள்ளார். எனவே விரைவில் ‘சிவலிங்கா’ பற்றிய அறிவிப்பு ரசிகர்களை வந்தடையும் எனத் தெரிகிறது.