‘ரஜினியை கடவுளுக்கு நிகராக நினைப்பதில் ஆச்சரியமில்லை…’ எமி


‘ரஜினியை கடவுளுக்கு நிகராக நினைப்பதில் ஆச்சரியமில்லை…’ எமி

மதராசப்பட்டினம் படம் மூலம் இந்திய சினிமாவுலகில் நுழைந்தவர் எமி ஜாக்சன்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

தற்போது சூப்பர் ஸ்டாருடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் நடித்து வருவது பற்றி, தன் அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எமி ஜாக்சன் தெரிவித்துள்ளதாவது…

ரஜினியுடன் நடிப்பது நானா என்று அடிக்கடி சூட்டிங்கில் என்னை கிள்ளி பார்த்து கொள்வேன். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்று ஒருநாளும் பழகியதில்லை.

அவரிடம் நிச்சயம் ஏதோ ஒரு காந்தம் போல ஈர்ப்பு இருக்கிறது. ரசிகர்கள் அவரை கடவுளுக்கு நிகராக நினைப்பதில் ஆச்சரியமில்லை.

ரஜினியும் ஷங்கரும் என்னை யங் ஐஸ்வர்யாராய் என்று அழைப்பது எனக்கு கிடைத்த பெரிய பாராட்டாக கருதுகிறேன். இப்படத்தில் எனக்கும் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது” என்றார்.