ரஜினியின் ‘பாட்ஷா-2’ ரெடி? சத்யாமூவிஸ் சொன்ன ரகசியம்!


ரஜினியின் ‘பாட்ஷா-2’ ரெடி? சத்யாமூவிஸ் சொன்ன ரகசியம்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ நாயகனாக உயர ஆரம்பித்துவிட்டார். இவரது நடிப்பில் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘கெட்ட பயடா இந்த கார்த்தி’ என்ற படத்தில் எமி ஜாக்சனின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இதனையடுத்து பாண்டிராஜின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ என பெயரிடப்பட்ட படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தமிழக சினிமா வரலாற்றில் இல்லையில்லை தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படத்தை சத்யாமூவிஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ டைட்டிலுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருந்தார் ஜி.வி.பிரகாஷ். ஆனால் அனுமதி தரமுடியாது என மறுத்துவிட்டதாம் சத்யாமூவிஸ்.

பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இதில் ரஜினி நடித்தால்தான் மாஸாக இருக்கும். ஆனால் ரஜினி சம்மதித்துவிட்டாரா எனத் தெரியவில்லை.

ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் நடிக்கவிருப்பதால் ரஜினி கண்டிப்பாக பாட்ஷா2 வில் நடிப்பார் என்கிறார்கள் இவரது ரசிகர்கள். ஏனென்றால் ரஜினி வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் ‘பாட்ஷா’ என்றனர்.

ஹேய்.. பாட்ஷா பாரு… பாட்ஷா-2 பாரு…