ரஜினியின் ‘கபாலி’ போட்டோ ஷுட் படம் வெளியானது!


ரஜினியின் ‘கபாலி’ போட்டோ ஷுட் படம் வெளியானது!

மிகுந்த பரபரப்புகளுக்கிடையே ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியானது. அன்றுமுதல் ரஜினி ஜுரம் ரசிகர்களை தொற்றிக் கொண்டது. படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? சூட்டிங் எப்போது? என்ற ரசிகர்களின் கேள்விக்கனைகள் படக்குழுவினரை நோக்கி பாய்ந்தன.

‘கபாலி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போட்டோ சூட் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் போட்டோ சூட் சமயத்தின் நடுவே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தில் ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இக்கதை சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாதா ஒருவரின் கதை என கூறப்படுகிறது. அந்த தாதா ‘கபாலி’ கேரக்டரில் ரஜினி நடிக்கிறார். ரஜினி இரு வேடங்களில் நடிக்க ஒருவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மற்றொரு நாயகியின் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

இவர்களுடன் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடிக்க தினேஷ், கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தியன்று (செப்டம்பர் 17ம் தேதி) வெளியிடவுள்ளனர்.