மீண்டும் ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த்?


மீண்டும் ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த்?

அரசியல் தன்னை அரவணைத்து கொண்டாலும், தனக்கு வாழ்வு கொடுத்த திரையுலகை முழுவதுமாக விஜயகாந்த் விட்டுவிடவில்லை. தன் மகன் சண்முகபாண்டியனை திரையுலகில் களம் இறக்கியுள்ளார். (அப்போ… அவரோட அடுத்த ‘மூவ்’ அரசியல்தானா கேப்டன்?)

இந்நிலையில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜனவரி 31 மாலை 6 மணிக்கு வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. விழா அழைப்பிதழில் கலந்து கொள்கிறவர்கள் பெயர்கள் இடம்பெற வில்லை.

ஆனால், சகாப்தம் படத் தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் விழாவில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம் கலந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

​​“சகாப்தம் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், சரத்குமார், விஷால், பிரபு, விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக், சிபிராஜ், சிம்பு, டி.ராஜேந்தர், தனுஷ், விமல், கருணாஸ், வெங்கட் பிரபு, கிருஷ்ணா, பிரேம்ஜி, அர்ஜுன், தியாகராஜன், பிரசன்னா மற்றும் ஏராளமான நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், ஷங்கர், முருகதாஸ், கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பாண்டிராஜ், விஷ்ணுவர்தன், மிஸ்கின், கங்கை அமரன், பேரரசு, மகிழ்திருமேணி, செல்வராகவன், ஜெயம் ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், பாலாஜி சக்திவேல், பிரபு சாலமன், கிருஷ்ணா​, ​சுசீந்திரன்​ ​ உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்களும், இன்னும் ஏராளமான முன்னணி தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.