த்ரிஷா-நயன்தாராவை பிரித்த ரஜினி-கமல்!


த்ரிஷா-நயன்தாராவை பிரித்த ரஜினி-கமல்!

தமிழ் சினிமாவில் அழகுடன் கூடிய திறமையான நடிகைகள் வரிசையில் மிக முக்கியமானவர்கள் த்ரிஷா, நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமை உண்டு.

அப்படி என்ன ஒற்றுமை இவர்களிடையே…? இதோ ஒற்றுமை விவரங்கள்…

 1.  தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள்.
 2.  12 வருடங்களை கடந்தும் குறையாத மவுசு.
 3.  இருவரும் 30 வயதை நெருங்கியவர்கள்.
 4.  இருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட ஒற்றுமை இருக்கிறது. சிம்புவுடன் நயன்தாரா காதல்; ராணாவுடன் த்ரிஷா காதல். இரு காதலும் நிறைவேறவில்லை.
 5. வருண்மணியனுடன் த்ரிஷாவின் காதல் திருமணம் வரை சென்றது. ஆனால் நிச்சயத்தோடு முடிந்து போனது.
 6. பிரபுதேவாவுடன் நயன்தாராவின் காதல் திருமணம் வரை சென்றது. ஆனால் முறிந்து போனது.
 7.  தற்போது நயன்தாரா கைவசம் ‘மாயா’, ‘நானும் ரௌடிதான்’, ‘இது நம்ம ஆளு’, ‘தனி ஒருவன்’, ‘காஷ்மோரா’, ‘திருநாள்’ என அரை டஜன் படங்கள் உள்ளது.
 8. த்ரிஷாவின் கைவசம் ‘பூலோகம்’, ‘அப்பாடக்கரு’, ‘போகி’, ‘அரண்மனை 2’, ‘தூங்காவனம்’, ‘நாயகி’ (தெலுங்கு) என அரை டஜன் படங்கள் உள்ளது.
 9. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விஷால், ஆர்யா, ஜீவா உள்ளிட்ட தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளனர்.
 10. இப்படி பெரும்பாலும் அனைத்து விஷயங்களில் இவர்கள் பிரியாதிருந்தாலும் ரஜினி-கமல் இருவரும் இவர்களை பிரித்து விட்டனர்.
 11. த்ரிஷா இதுவரை ரஜினியுடன் நடிக்கவில்லை. அதுபோல நயன்தாரா இன்னும் கமலுடன் நடிக்கவில்லை. (அப்பாடா ஒரு வழியா சொல்லிட்டோம்.)

ரஜினி-கமல் சார்.. அவங்கள பிரிச்ச பாவம் உங்களுக்கு வேண்டாம். சீக்கிரமே சேர்ந்து நடிச்சுடுங்க.