கமலை பின்பற்றும் ரஜினி; முருகதாஸ்-கிரேஸியுடன் ஒரு ‘ஜாலி’ படம்?


கமலை பின்பற்றும் ரஜினி; முருகதாஸ்-கிரேஸியுடன் ஒரு ‘ஜாலி’ படம்?

விளையாட்டு ரசிகர்கள் மத்தியில ஒரு பேச்சு இருக்குன்னா அது கண்டிப்பாக கிரிக்கெட் பத்தி இருக்கும். அதுபோல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில ஒரு பேச்சு இருக்குன்னா அது கண்டிப்பா ரஜினியோட அடுத்த படம் என்ன? என்பது பற்றி இருக்கும்.

அதனால… இப்போ அதை பத்தித்தான் சொல்ல போறோம். “லிங்கா பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சுட்டுடா லிங்கேஸ்வரா” என்று ஆண்டவன வேண்டிக்கிட்டு ரஜினி ரிலாக்ஸா  இமயமலைக்கு ஒரு ட்ரிப் போவாரு பார்த்தா அவரு நேரா எங்க போயிருக்காரு தெரியுமா?

என்னா ஒண்ணு ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், முருகதாஸ் இவிங்கள்ல யாரு வீட்டுக்காச்சும் போய் இருப்பாரு அதானே… அப்படின்னு உங்கள போல நாங்களும் நினைச்சுபுட்டோம். ஆனா அங்கதான் தலைவர் ஒரு ட்விஸ்ட் வைச்சுட்டாரு. நேரா கிரேஸிமோகன் வீட்டுக்கு போனாராம்.

சீரியஸ் படமா பண்ணி போராட்டிச்சுட்டு (யாருக்கு… யாருக்கோ?) அதனால அடுத்த படம் ஜாலியா இருக்கனும். (இது நமக்குத்தான்) எனக்கும் அப்படி ஒரு புல் லென்த் காமெடி படம் பண்ணணும் ரொம்ப நாள ஆசை. அப்படி சொல்லியிருக்காராம் ரஜினி. கிரேஸிக்கு கேட்கவா வேணும்? அருணாச்சலம் படத்துக்கு பிறகு தலைவர்கிட்ட இருந்து ஒரு சான்ஸ். மிஸ் பண்ணவா தோனும். உடனே அவரும் ஓகே சொன்னதான் தகவல் வந்திருக்கு.

இதுலதான் கமலே வரலையே… அப்புறம் எப்படி? கமல் சாரை ரஜினி பாலோ? அப்படின்னு நீங்க கேட்குற மைண்ட் வாய்ஸ் கேட்குது. கமல் சீரியஸா ஒண்ணு ரெண்ணு படம் பண்ணினா அவரோட அடுத்த படம் காமெடிதான். அது கன்பாஃர்ம். உதாரணத்துக்கு பார்த்திங்கன்னா…

‘உன்னால் முடியும் தம்பி’ ன்னு ஒரு சீரியஸ் படம் பண்ணிட்டு ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் பண்ணினாரு. இதுல ஆரம்பிச்ச ‘கமல்-கிரேஸி கூட்டணி’ இன்னைக்கும் வரைக்கும் தொடருது. ‘வெற்றி விழா’ படம் கொடுத்துட்டு ‘மைக்கேல் மதன காம ராஜன்’.. இப்படியாக ‘ஆளவந்தான்’ அடுத்து ‘பஞ்சதந்திரம்’, ‘விருமாண்டி’ அடுத்து ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ என தொடர்ந்து கிரேஸியுடன் கைகோர்த்து காமெடி படங்களில் சீரியஸ் வெற்றி கொடுத்தவர்தான் கமல்.

அதனால கமலோட இந்த ட்ராக்க பாலோ பண்ணப்போறாராம் ரஜினி. கடைசியா வந்த ‘லிங்கா’, ‘கோச்சடையான்’,’ எந்திரன்’, ‘சிவாஜி’ இது எல்லாமே சீரியஸ் படங்கள்தான். அதான் அவரோ அருணாச்சலம் படத்துக்கு வசனம் எழுதின கிரேஸியை மீட் பண்ணி இருக்காரு ரஜினி.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துல ரஜினி அடுத்து நடிக்க போறதா ஒரு தகவல் வந்து இருக்கு. இந்த சமயத்துல ரஜினி, கிரேஸியை மீட் பண்ணினதால முருகதாஸ் படத்துக்கு ஒரு வேளை கிரேஸி வசனம் எழுத போறாரோ தெரியலை. ஒர்க் அவுட் ஆச்சுன்னா வித்தியாச கூட்டணிதான்.