‘பாட்ஷா’வுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் அதிரடி ரிலீஸ்.!


‘பாட்ஷா’வுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் அதிரடி ரிலீஸ்.!

இரண்டு வருடத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு படம் என கொடுத்து வருகிறவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், தற்போது நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ஒரே நேரத்தில் கபாலி, 2.0 ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து வரும் கபாலி படம் கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. எனவே, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்களை இணையத்தில் ஆராய்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னர் அதாவது 1995ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் பாட்ஷா வெளியாகி பட்டைய கிளப்பியது. அதன்பின்னர் கடந்த 20 வருடங்களாக ரஜினிகாந்த் நடித்த படங்கள் பண்டிகை காலமாக இல்லாமல் மற்ற நாட்களில் வெளியானது.

ஒரு சில படங்கள் சித்திரை முதல் நாளில் வெளியானது. முத்து தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. ஆனால் குலேசன், பாபா, சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா உள்ளிட்ட படங்கள் பண்டிகை காலங்களில் வெளியாகவில்லை.

இந்நிலையில் லைக்கா தயாரித்து வரும் 2.ஓ படத்தை 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மீண்டும் பாட்ஷா போல் இப்படமும் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.