ரஜினிமுருகன் நாயகியுடன் ரஜினியின் நாயகி!


ரஜினிமுருகன் நாயகியுடன் ரஜினியின் நாயகி!

‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மேனகா. தமிழை தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களிலும் கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். மலையாள திரையுலகை கலக்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் கணவருடன் இணைந்து படங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

தற்போது இவர்களுடைய மகள் கீர்த்தி சுரேஷ் தமிழின் முன்னணி நாயகியாக மாறிவிட்டார். இவர் நடித்து ‘இது என்ன மாயம்’ படம் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினிமுருகன்’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, பாபி சிம்ஹாவுடன் ‘பாம்புச்சட்டை’, தனுஷுடன் பிரபுசாலமனின் புதிய படம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இதுவரை ஓய்வில் இருந்த மேனகா, மகள் நடிக்க வந்தவுடன் இவரும் நடிக்க வந்துவிட்டார். பாலசந்திர மேனனின் ‘ஜான் சாம்விதானம் செய்யும்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.